இரண்டு பொருட்கள் மட்டுமே பயன்படுத்தி சாக்லேட் பான்கேக் | No Flour | Pretty Simple & Sweet | with step by step photos & video. இது சாக்லேட் விரும்பிகளுக்கு ஏற்ற காலை உணவு அல்லது சிற்றுண்டி. ஒவ்வுறு கடையிலும் சாக்லேட் நிறைந்துள்ளது. அனைத்து சோகோ பிரியர்களும் விரும்பும் பான்கேக் .
காலையில் குழந்தைகளை மகிழ்விக்க ஒரு சரியான வழி, அவர்களுக்கு சில சாக்லேட் பான்கேக்சே செய்து கொடுங்கள். அவை லேசானவை, பஞ்சுபோன்றவை மாற்றுமல்ல நம்பமுடியாத அளவிற்கு எளிதானவை. உங்கள் காலை உணவை உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் வேடிக்கையாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குங்கள்.
மைதா இல்லாமல் இரண்டு மூலப்பொருட்கள் பயன்படுத்தி சாக்லேட் பான்கேக் எப்படி செய்வது?
இரண்டு பொருட்கள் மட்டுமே பயன்படுத்தி சாக்லேட் பான்கேக் | மாவு பயன்படுத்தாமல் | எளிய செய்முறை | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். நான் உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளும் செய்முறைக்கு இரண்டு பொருட்கள் தேவை: முட்டை மற்றும் சாக்லேட். கிட்டத்தட்ட அனைவரும் டைரி மில்க் சாக்லேட் பிரியர்கள். நான் 100 கிராம் டைரி மில்க் சாக்லேட்டைப் பயன்படுத்துகிறேன். முதலில், முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவைப் பிரிக்கவும். பின்னர் ஒரு விஸ்க் அல்லது பீட்டரைப் பயன்படுத்தி முட்டையின் வெள்ளையே நன்றக கலந்து ஸ்டிப்ப் பீக்ஸ் உருவாகும் வரை பீட் பண்ணுங்கள். பிறகு அதனுடன் உருக்கிய சாக்லேட் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை இணைக்கவும்.
மேலும், நாங்கள் இந்த மாவே கட்டோரிகளில் பேக் செய்ய போகிறோம். முழுமையாக சமைக்க 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். பழங்கள், கிரீம், தூள் சர்க்கரை அல்லது தயிர் ஆகியவற்றை இத்துடன் பரிமாறவும்.
மேலும், என் மற்ற சிற்றுண்டி செய்முறைகள் பாருங்கள். மற்றும் கிட்ஸ் கோர்னெர் பகுதியே நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.
இரண்டு பொருட்கள் மட்டுமே பயன்படுத்தி சாக்லேட் பான்கேக்
Course: பான்கேக், மெய்ன்Cuisine: சர்வதேசDifficulty: சுலபம்2
பான்கேக்10
நிமிடங்கள்15
நிமிடங்கள்25
நிமிடங்கள்இரண்டு பொருட்கள் மட்டுமே பயன்படுத்தி சாக்லேட் பான்கேக் | மாவு பயன்படுத்தாமல் | எளிய செய்முறை | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். இது சாக்லேட் விரும்பிகளுக்கு ஏற்ற காலை உணவு அல்லது சிற்றுண்டி.
தேவையான பொருட்கள்
100 கிராம் டைரி மில்க் சாக்லேட்
2 முட்டை
1 தேக்கரண்டி ஸ்பிரிங்க்ல்ஸ் (விரும்பினால்)
1 டேபிள் ஸ்பூன் தூள் சர்க்கரை
செய்முறை :
- முதலில், முட்டையின் வெள்ளை மற்றும் முட்டையின் மஞ்சள் கருவைப் பிரிக்கவும்.
- ஒரு விஸ்க் அல்லது பீட்டரைப் பயன்படுத்தி முட்டையின் வெள்ளையே நன்றக கலந்து ஸ்டிப்ப் பீக்ஸ் உருவாகும் வரை பீட் பண்ணுங்கள். அதை ஒதுக்கி வைக்கவும்.
- இப்போது சாக்லேட் துண்டுகளை சிறிய துண்டுகளாக உடைக்கவும்.
- 5 முதல் 10 நொடி வரை சாக்லேட் துண்டுகள் உருகும் வரை மைக்ரோவேவ் செய்யவும் .
- இது ஒரு மென்மையான பேஸ்ட் வடிவத்தில் உருகியதும், முட்டையின் மஞ்சள் கருவைச் சேர்க்கவும். அதை கலந்து நன்கு சேர்க்கவும்.
- பின்னர் முட்டையின் வெல்லயே சிறிது சிறிதாக சேர்த்து அதை ஒரு மென்மையான மாவாக கலந்து அதை ஒதுக்கி வைக்கவும்.
- கட்டோரிகளில் பேக்கிங் பேப்பரை வைத்து சிறிது என்னை தடவவும்.
- கட்டோரிகளில் பான்கேக் மாவே ஊற்றவும். இந்த அளவு செய்முறைக்கு வெறும் 2 கட்டோரிகள் போதும்.
- இப்போது குறைந்த தீயில் 5 நிமிடங்கள் ஒரு கடாயை முன்கூட்டியே சூடாக்கவும்.
- 5 நிமிடங்களுக்குப் பிறகு, கட்டோரிகளை ஸ்டாண்ட் அல்லது ஒரு தட்டு மேல் வைக்கவும்.
- குறைந்த தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் சமைக்கவும்.
- பான் கேக்குகள் தயாராக உள்ளது.
- அது முழுமையாக குளிர்ந்தவுடன் அதின்மேலே சில ஸ்பிரிங்க்ல்ஸ் அல்லது தூள் சர்க்கரை அல்லது கிரீம் கொண்டு பரிமாறவும்.
செய்முறை விளக்க வீடியோ
குறிப்புகள்
- இந்த பான்கேக்கை சமைக்க நீங்கள் கேக் அச்சுகளையும் பயன்படுத்தலாம்.
- டைரி மில்க் சோகளேட்டுக்கு பதிலாக 100 கிராம் இனிப்பு சாக்லேட் சில்லுகளையும் பயன்படுத்தலாம்.