Sweet Butter Bread Toast | with step by step photos and video. This easy breakfast toast bread is the perfect answer for the morning rush. The aroma of the bread, brown sugar, and butter getting toasted in the toaster or pan is irresistible. I bet your kids will love this sweet toast.
சரியான டோஸ்ட்டுக்கான உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள்:
- உப்பு சேர்க்காத வெண்ணெய் தேர்ந்தெடுக்கவும்.
- ஒரு சரியான சுவைக்கு வெண்ணெய் தாராளமாக பயன்படுத்தவும்.
- அறை வெப்பநிலையில் வெண்ணெய் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- பானில் டோஸ்ட் பண்ணுன்போது எப்போதும் தீயே குறைவாக வைக்க கவனமாயிருங்கள்.
How to make a perfect sweet bread butter toast?
ஸ்வீட் பட்டர் டோஸ்ட் | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். முதலில், வெண்ணெய் மற்றும் நாட்டு சர்க்கரை மென்மையாக மாறும் வரை கலக்கவும். பின்னர் ரொட்டிகளில் தடவி அதை டோஸ்ட் செய்து சாப்பிடவும். அவ்வளவுதான். இந்த செய்முறைக்கு நாம் சாதாரண சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரையைப் பயன்படுத்தலாம். ஆனால் நாட்டு சர்க்கரை பயன்படுத்துவது தான் மிகவும் சுவையாக இருக்கும். மிகவும் எளிமையான மற்றும் விரைவான உணவு செய்முறை. நாட்டு சர்க்கரையின் நறுமணமும் சுவையும் சுவைக்கும் போது உங்களால் உணர முடியும். வெண்ணெய் சர்க்கரை கலவையைப் பயன்படுத்துவதில் தாராளமாக இருங்கள்.
டோஸ்ட் :ரொட்டி துண்டுகளில் சிறிய வெப்பத்தை வெளிப்படுத்துவதன் மூலம் பழுப்பு நிறமாக மாறும் வரை இருபுறமும் வறுக்கப்படுகிறது. இதை தான் டோஸ்ட்டிங் என்று அழைக்கிறார்கள்.
மேலும், எங்கள் மற்ற டோஸ்டுகள் மற்றும் சாண்ட்விச் செய்முறைகளே பார்க்கவும். நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.
Sweet Butter Bread Toast
Course: காலை உணவு, சிற்றுண்டிCuisine: சர்வதேசDifficulty: சுலபம்3
Bread Toasts5
நிமிடங்கள்5
நிமிடங்கள்10
நிமிடங்கள்Sweet Butter Bread Toast | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். இந்த எளிதான காலை உணவு அல்லது சிற்றுண்டி நம் அவசரமான நாட்களின் காலை உணவுக்கு ஒரு சரியான பதில்.
தேவையான பொருட்கள்
4 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்க்காத வெண்ணெய் (அறை வெப்பநிலையில்)
2 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை
3 ரொட்டி துண்டுகள்
செய்முறை :
- முதலில், ஒரு பாத்திரத்தில் 4 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்க்கவும்.
- இது மென்மையான நில தன்மைக்கு மாறும் வரை கலக்கவும்.
- ரொட்டி துண்டுகளின் ஒரு பக்கத்தில் கலவையை தடவுங்கள்.
- இப்போது, ஒரு பான் சூடாக்கவும். அது சூடேறியதும் தீயேக் குறைத்து, வெண்ணெய் பூசப்பட்ட பக்கத்தை டோஸ்ட் பண்ணவும். இப்போது வெண்ணெய் கலவையை ரொட்டியின் மறுபக்கத்திலும் தடவவும்.
- ரொட்டி துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை டோஸ்ட் பண்ணவும்.
- ஸ்வீட் பட்டர் டோஸ்ட் தயாராக உள்ளது.
செய்முறை விளக்க வீடியோ
குறிப்புகள்
- டோஸ்ட் பண்ணும்போது எப்போதும் தீயே குறைவாக வைக்கவும் அல்லது சீக்கிரம் கரிந்து பக்க வாய்ப்புள்ளது.
- அறை வெப்பநிலையில் உள்ள உப்பு சேர்க்காத வெண்ணெய் பயன்படுத்தவும்.