வெண்பனி புட்டிங் அல்லது முட்டை வெள்ளை புட்டிங் | 2 பொருட்களைப் பயன்படுத்தி | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன்.கேரமல் செய்யப்பட்ட சர்க்கரையே மேற்பரப்பில் கொண்ட ஒரு சுவையான புட்டிங்.
இந்த சுவையான இனிப்பு புட்டிங்கே, நாங்கள் மீண்டும் மீண்டும் செய்வோம். நீங்களும் செய்வீர்கள் என்று நம்புகிறேன்! நீங்கள் இதை அப்பிடியே பரிமாறலாம், அல்லது நீங்கள் அதை பழம், கிரீம், குக்கீகள் அல்லது வாழைப்பழங்களுடன் இணைத்து பரிமாறலாம்.
புட்டிங் என்றால் என்ன ?
புட்டிங் என்பது ஒரு வகை உணவு. இது ஒரு இனிப்பு அல்லது உப்பு மற்றும் காரமான முறையிலும் செய்யக்கூடிய கட்டியான ஒரு செய்முறையாகும். இது முக்கிய உணவின் ஒரு பகுதியாகும்.
வகைகள்: பேக் செய்த புட்டிங், வேகவைத்த புட்டிங் மற்றும் ஆவியில் வேகவைத்த புட்டிங்
பாரம்பரியமாக புட்டிங் தயாரிக்க ஒரு வகை தானியத்துடன் அல்லது வெண்ணெய், மாவு, தானியங்கள் அல்லது முட்டை போன்ற பிற பைண்டர்களுடன் பல்வேறு பொருள்களைக் கலப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது. இப்படி சேர்ப்பதன் விளைவாக திடமான ஒரு நிறை ஏற்பட்டடுகிறது. இந்த திடமான நிறை ஏற்படுத்த இதை பேக் அல்லது வேக வைப்பது அல்லது ஆவியில் வேகவைக்க தேவைப்படுகிறது.
வெண்பனி புட்டிங் அல்லது முட்டை வெள்ளை புட்டிங் எப்படி செய்வது?
வெண்பனி புட்டிங் அல்லது முட்டை வெள்ளை புட்டிங் | 2 பொருட்களைப் பயன்படுத்தி | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். இதன் பெயர் ஏன் வெண்பனி புட்டிங் என்று யூகிக்கிறீர்களா? ஏனெனில் இந்த புட்டிங் சாப்பிடும் போது பனியைப் போலவே வாயிலும் உருகும். இங்கே பகிரப்பட்ட செய்முறையானது வெறும் 2 பொருட்களைப் பயன்படுத்துகிறது: சர்க்கரை மற்றும் முட்டை வெள்ளை. முட்டையின் வெள்ளை மென்மையான சிகரங்கள் பெரும் வரை சர்க்கரையுடன் பீட் செய்யப்படுகிறது. பின்னர் இது திடமான நிறை அமைக்கப்படும் வரை வேகவைக்கபடுகிறது.
கூடுதலாக, எங்கள் பிற புட்டிங் செய்முறைகளையும் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்.
வெண்பனி புட்டிங் அல்லது முட்டை வெள்ளை புட்டிங்
Course: இனிப்பு வகைகள்Cuisine: சர்வதேசDifficulty: சுலபம்5
துண்டுகள்10
நிமிடங்கள்20
நிமிடங்கள்30
நிமிடங்கள்வெண்பனி புட்டிங் அல்லது முட்டை வெள்ளை புட்டிங் | 2 பொருட்களைப் பயன்படுத்தி | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன்.கேரமல் செய்யப்பட்ட சர்க்கரையே மேற்பரப்பில் கொண்ட ஒரு சுவையான புட்டிங்.
தேவையான பொருட்கள்
2 முட்டைகளின் முட்டை வெள்ளை
3 டேபிள் ஸ்பூன் + 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
5 சொட்டு வெண்ணிலா எசென்ஸ்
செய்முறை :
- முதலாவதாக, கொஞ்சம் சர்க்கரையை கேரமலைஸ் செய்வோம். அதற்கு ஒரு கடாயை அல்லது பாண் சூடாக்கி 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.
- சர்க்கரை பழுப்பு நிறத்தைப் பெறும் வரை குறைந்த வெப்பத்தில் கேரமல் செய்ய விடவும்.
- தீயே அணைத்து புட்டிங் செட் பண்ண வைத்திருக்கும் பௌள் அல்லது அச்சுக்குள் ஊற்றவும்.
- கேரமல் கிண்ணத்தின் அனைத்து மூலைகளிலும் பக்கங்களிலும் அடையும்படி கிண்ணத்தை சுற்றவும். பின்னர் அதை குளிர்விக்க ஒதுக்கி வைக்கவும்.
- இப்போது, 2 முட்டைகளை உடைத்து, முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவைப் பிரிக்கவும்.
- முட்டையின் வெள்ளையில் 5 சொட்டு வெண்ணிலா சாரம் சேர்க்கவும்.
- இப்போது, ஒரு விசுக் அல்லது ஒரு முட்டை பீட்டர்ப் பயன்படுத்தி முட்டையின் வெள்ளை பீட் பண்ண துடங்கவும்.
- முட்டை நுரைக்க ஆரம்பித்ததும் 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.
- மீண்டும் முட்டையின் வெள்ளையே 3 முதல் 4 நிமிடங்கள், மென்மையான சிகரங்கள் உருவாகும் வரை பீட் செய்யவும்.
- இப்போது, முட்டையின் வெள்ளையே, ஒதுக்கி வைத்திருக்கும் புட்டிங் கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு ஸ்பூன் பயன்படுத்தி அதை லெவல் செய்யவும்.
- ஒரு இட்லி தட்டில் தண்ணீரை சுட வைத்து, புட்டிங் கிண்ணத்தை தட்டில் வைக்கவும்.
- ஒரு படலம் காகிதத்தைப் பயன்படுத்தி கிண்ணத்தை மூடவும். படலம் காகிதத்தில் 2 முதல் 3 துளைகளை போடவும்.
- 15 முதல் 20 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.
- புட்டிங் வெந்ததை என்று சோதிக்க ஒரு ஸ்பூன் பயன்படுத்தவும். புட்டிங் மேல் புறம் கடினமாக இருந்தால், அது வெந்தது என்று அர்த்தமாகும்.
- குளிர்விக்க அனுமதிக்கவும். குளிர்ந்தவுடன் அதை ஒரு தட்டுக்கு மாற்றவும். குளிராக புட்டிங்கை சாப்பிட விரும்புவோர் அதை 1 முதல் 2 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.
செய்முறை விளக்க வீடியோ
குறிப்புகள்
- குளிராக புட்டிங்கை சாப்பிட விரும்புவோர் அதை 1 முதல் 2 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.