Small Batch Eggless Orange Cupcakes Recipe

முட்டை இல்லாத ஆரஞ்சு கப்கேக் செய்முறை

பகிர...

முட்டை இல்லாத ஆரஞ்சு கப்கேக் செய்முறை | நுடெல்லா டாப்பிங்குடன் பஞ்சுபோன்ற சிறிய பகுதி கப்கேக் செய்முறை | படிப்படியான புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். முட்டைகள் இல்லாமல் தயாரிக்கப்படும், இந்த மென்மையான தின்பண்டங்கள் தேநீருடன் பரிமாற ஏற்றது. இந்த கப்கேக்குகளை எந்த ஒரு சந்திப்புக்காகவோ, பிறந்தநாள் விழாவுக்காகவோ அல்லது உங்கள் இனிப்பு ஆசையை திருப்த்திப்படுத்துவதற்காகவோ தயாரிக்கலாம் . நிச்சயமாக எளிதில் செய்யக்கூடிய ஒரு நேரடியான செய்முறை.

செய்முறையானது கப்கேக்குகளை உருவாக்க புதிதாக பிழிந்த ஆரஞ்சு சாறு அல்லது ஜூஸ் மற்றும் ஆரஞ்சு தொலி ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. மேலும், நுட்டெல்லா டாப்பிங் அதை மிகவும் சுவையாகவும் ஆக்குகிறது. இந்த செய்முறையானது நான் முன்பு பகிர்ந்த ஆரஞ்சு ட்ரிப் கேக் மற்றும் ஆரஞ்சு டீ கேக் ஆகியவற்றிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது. 

பேக்கிங் செய்வதற்கு முன் இவற்றைக் கவனியுங்கள்:

ஆரஞ்சு சாற்றை மாவுடன் சேர்க்கும் முன் சுவைக்கவும். சில நேரங்களில் ஆரஞ்சு நன்றாக இருக்கும், ஆனால் அதை நீண்ட நேரம் வெளியே வைத்திருந்தால் கசப்பான சுவை இருக்கும். எனவே இந்த செய்முறையில் ஆரஞ்சு பயன்படுத்துவதற்கு முன்பு அதை சுவைப்பது நல்லது.

கீழே உள்ள செய்முறையின் படி பொருட்களை சரியாக அளவிடவும். அதிக திரவத்தைச் சேர்ப்பது கேக்கின் அமைப்பை மாற்றும்.

சிறிய அளவில் முட்டை இல்லாத ஆரஞ்சு கப்கேக் செய்வது எப்படி?

முட்டை இல்லாத ஆரஞ்சு கப்கேக் செய்முறை | நுடெல்லா டாப்பிங்குடன் பஞ்சுபோன்ற சிறிய பகுதி கப்கேக் செய்முறை | படிப்படியான புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். செய்முறை மிகவும் எளிமையானது மற்றும் இந்த அளவீடுகளைப் பயன்படுத்தி சரியாக 6 கப்கேக்குகளை நீங்கள் செய்யலாம். இந்த கப்கேக்கின் அமைப்பு மற்றும் அதன் சுவை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த செய்முறையின் மிகவும் திருப்த்திகரமான பகுதி இங்கே பயன்படுத்தப்படும் ஆரஞ்சு சாறு ஆகும். இந்த சிட்ரஸ் கேக் மிகவும் சுவையை தருகிறது, புதிய ஆரஞ்சு சாறு அழகான மஞ்சள் நிறத்தை அளிக்கிறது. அதிக கப்கேக்குகளுக்கான அளவீடுகளை நீங்கள் இரட்டிப்பாக்கலாம் அல்லது மூன்று மடங்காக செய்யலாம்.

முட்டை இல்லாத ஆரஞ்சு கப்கேக் செய்முறை

Course: இனிப்பு வகைகள்Cuisine: சர்வதேசDifficulty: சுலபம்
சர்விங்ஸ் (சேவை)

6

கப் கேக்
தயாரிப்பு நேரம்

10

நிமிடங்கள்
சமைக்கும் நேரம்

30

நிமிடங்கள்
மொத்த நேரம்

40

நிமிடங்கள்

முட்டை இல்லாத ஆரஞ்சு கப்கேக் செய்முறை | நுடெல்லா டாப்பிங்குடன் பஞ்சுபோன்ற சிறிய பகுதி கப்கேக் செய்முறை | படிப்படியான புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். முட்டைகள் இல்லாமல் தயாரிக்கப்படும், இந்த மென்மையான தின்பண்டங்கள் தேநீருடன் பரிமாற ஏற்றது.

தேவையான பொருட்கள்

  • 3/4 கப் மைதா

  • 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்

  • 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா

  • ஒரு சிட்டிகை உப்பு

  • 1/4 கப் தயிர்

  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

  • 90 கிராம் சர்க்கரை (1/2 கப்புக்கு கொஞ்சம் குறைவாக)

  • 1/4 கப் ஆரஞ்சு சாறு

  • ஆரஞ்சு ஃபுட் கலர் 2 சொட்டுகள் (விரும்பினால்)

  • 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல்

செய்முறை :

  • ஓவென் 150 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்களுக்கு முன்கூட்டியே சூடாக்கவும். அல்லது ஒரு கடாயை 10 நிமிடம் குறைந்த தீயில் மூடி வைத்து சூடுபடுத்தவும்.
  • முதலில், ஒரு பாத்திரத்தில் 3/4 கப் மைதா, 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.Small Batch Eggless Orange Cupcakes Recipe
  • அவற்றை நன்றாக கலந்து ஒதுக்கி வைக்கவும்.Small Batch Eggless Orange Cupcakes Recipe
  • இப்போது மற்றொரு பாத்திரத்தில் 1/4 கப் தயிர், 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் 90 கிராம் சர்க்கரை சேர்க்கவும்.Small Batch Eggless Orange Cupcakes Recipe
  • சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறவும்.Small Batch Eggless Orange Cupcakes Recipe
  • இறுதியாக, 1/4 கப் புதிதாக பிழிந்த ஆரஞ்சு சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.Small Batch Eggless Orange Cupcakes RecipeSmall Batch Eggless Orange Cupcakes Recipe
  • இப்போது உலர்ந்த பொருட்களை சிறிது சிறிதாக சேர்க்கவும்.Small Batch Eggless Orange Cupcakes Recipe
  • பொருட்களை கலந்து , கட்டிகள் இல்லாத மாவை உருவாக்கவும்.Small Batch Eggless Orange Cupcakes Recipe
  • இறுதியாக 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல், மற்றும் 2 சொட்டு ஆரஞ்சு உணவு நிறத்தையும் சேர்க்கவும். Small Batch Eggless Orange Cupcakes Recipe
  • எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும். இப்போது மாவு தயாராக உள்ளதுSmall Batch Eggless Orange Cupcakes Recipe
  • கப்கேக் லைனர்கள் வரிசைப்படுத்திய கப்கேக் ட்ரேயில் மாவை மாற்றவும்.
  • ஒவ்வொரு கப்கேக் துளைகளிலும் 2 டேபிள் ஸ்பூன் மாவு சேர்க்கவும்.Small Batch Eggless Orange Cupcakes Recipe
  • மாவைத் தட்டி சமம் செய்யவும்.Small Batch Eggless Orange Cupcakes Recipe
  • 150 டிகிரி செல்சியஸில் 25 முதல் 30 நிமிடங்கள் வரை சூடேற்றப்பட்ட ஓவெனில் அவற்றை பேக் செய்யவும். அல்லது ப்ரீ ஹீட் செய்யப்பட்ட கடாயில் 25 நிமிடங்கள் குறைந்த தீயில் பேக் செய்யலாம்.Small Batch Eggless Orange Cupcakes Recipe
  • 28 நிமிடங்களில் சரியாக பேக் செய்யப்பட்டது. Small Batch Eggless Orange Cupcakes Recipe
  • அவற்றை குளிர்விக்க அனுமதிக்கவும். நான் இவற்றை அடுத்த நாள் சாப்பிடத்தான் விரும்புகிறேன். Small Batch Eggless Orange Cupcakes Recipe
  • நீங்கள் உடனடி ஃப்ரோஸ்டிங் விரும்புகிறீர்கள் என்றால், கொஞ்சம் நுட்டெல்லாவை பைப் செய்து அவற்றை வடிவமைக்கலாம். அல்லது எங்களின் டிரெண்டிங் சாக்லேட் கனாச்சே ஃப்ரோஸ்டிங் செய்முறையை நீங்கள் பார்க்கலாம்.Small Batch Eggless Orange Cupcakes Recipe
  • ஒரு கப் தேநீருடென், உங்கள் விருப்பப்படி கப்கேக்குகளை மகிழுங்கள்.

செய்முறை விளக்க வீடியோ

குறிப்புகள்

  • குறைந்த வெப்பநிலையில் அவற்றை சுடுவது பொதுவாக சிறிது நேரம் எடுக்கும், ஆனால் உங்களுக்கு சரியான தட்டையான மேற்பகுதியை வழங்குகிறது.
  • செய்முறைக்கு புதிதாக எடுத்த ஆரஞ்சு சாற்றைப் பயன்படுத்தவும்.
தமிழ்