ரவை பூரி செய்முறை

பகிர...

ரவை பூரி செய்முறை | சுவையான பூரி | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். ரவை, உப்பு மற்றும் தண்ணீரிலிருந்து தயாரிக்கப்படும் புளிப்பில்லாத மாவிலிருந்து வறுத்ததெடுக்கப்படும் சுவையான பூரி.

பூரி என்றால் என்ன?

பூரி என்பது இந்திய சாப்பாடு வகைகிலிலுள்ள ருசியான வறுத்தெடுக்கப்படும் ஒரு சாப்பாடு வகையாகும். இது முழு கோதுமை மாவு அல்லது மைதாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது மற்றும் எண்ணெயில் வறுத்தெடுக்கப்படுகிறது. அடிப்படை செய்முறை எப்போதும் முழு கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீரில் தயாரிக்கப்படுகிறது. முழு கோதுமை மாவுடன் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் சேர்க்கலாம். மாவை புளிக்கவைக்க தேவையில்லை.

சிறிய பந்துகள் மாவிலிருந்து எடுத்து, வட்டமாக மற்றும் சமமாக உருட்டப்படடு பின்னர் சூடான எண்ணெயில் வறுத்தெடுக்கப்படுகிறது. பூரி வறுக்கும்போது ஊதிவருவது நன்கு தயாரிக்கப்பட்ட பூரியின் அளவுகோலாகும். பூரி ஊதிவருவது ஒரு மென்மையான அமைப்பைக் கொடுக்க உதவுகிறது.

பூரியை வறுக்கும்போது உடையக்கூடாது, இல்லையெனில் எண்ணெயை உறிஞ்சிவிடும்.

ரவை பூரி எப்படி செய்வது?

ரவை பூரி செய்முறை | சுவையான பூரி | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். இங்கே பகிரப்பட்ட செய்முறையானது மைதா அல்லது கோதுமை மாவுக்கு பதிலாக தூள் ரவைப் பயன்படுத்துகிறது. நீங்கள் வறுத்த அல்லது வருக்காத ரவைப் பயன்படுத்தலாம். முதலில், ரவை தூள் செய்து பின்னர் ஒரு மாவாக பிசையவும். ரவை நிறைய ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே தண்ணீரைச் சேர்ப்பதில் கவனமாக இருங்கள். மேலும், ஒரு மென்மையான மாவாக முதலில் பிசைந்து கொள்ளவும். பின்னர் சிறிய பந்துகளை மாவிலிருந்து எடுத்து சமமாக உருட்டப்பட்டு பின்னர் சூடான எண்ணெயில் வறுக்கப்படுகிறது.

மேலும், தென்னிந்திய உணவு சாப்பாடு வகைகளை , காலை உணவு பகுதியிலிருந்து முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.

ரவை பூரி செய்முறை

Course: காலை உணவுCuisine: இந்தியன்Difficulty: சுலபம்
சர்விங்ஸ் (சேவை)

10

பூரி
தயாரிப்பு நேரம்

10

நிமிடங்கள்
சமைக்கும் நேரம்

10

நிமிடங்கள்
மொத்த நேரம்

20

நிமிடங்கள்

ரவை பூரி செய்முறை | சுவையான பூரி | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். ரவை, உப்பு மற்றும் தண்ணீரிலிருந்து தயாரிக்கப்படும் புளிப்பில்லாத மாவிலிருந்து வறுத்ததெடுக்கப்படும் சுவையான பூரி.

தேவையான பொருட்கள்

  • 1 கப் வறுத்த அல்லது வறுக்காத ரவை

  • 2 தேக்கரண்டி எண்ணெய் / நெய்

  • 1/4 தேக்கரண்டி உப்பு

  • 1/2 முதல் 3/4 கப் தண்ணீர்

  • 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு

  • வறுக்க தேவையான எண்ணெய்

செய்முறை :

  • முதலில், 1 கப் ரவையே மிக்சியில் சேர்க்கவும்.rava poori puri recipe
  • இதை நன்றாக தூளாக அரைக்கவும்.rava poori puri recipe
  • அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். தேவைக்கேற்ப உப்பு மற்றும் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.rava poori puri reciperava poori puri reciperava poori puri reciperava poori puri recipe
  • இப்போது, தண்ணீரை சிறிது சிறிதாக சேர்க்க ஆரம்பித்து, மென்மையான மற்றும் மாவாக பிசையவும். மாவு ரொம்ப கட்டியாக இருக்கக்கூடாது.rava poori puri reciperava poori puri recipe
  • அதை மூடி வைத்து, 3 முதல் 5 ஒதுக்கி வைக்கவும்rava poori puri recipe
  • 5 நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீர் உறிஞ்சப்பட்டு மாவு போதுமான அளவு இறுக்கமாகக் காணலாம். மாவு மிகவும் இறுக்கமாக இருந்தால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசையவும்rava poori puri recipe
  • பின்னர் மாவை சிறிய பந்துகளாக உருட்டவும். 1 கப் ரவையிலிருந்து 10 மாவு உருண்டைகள் கிடைத்தன.rava poori puri reciperava poori puri recipe
  • கொஞ்சம் கோதுமை மாவைத் தூவி, மாவை மிக வட்டங்களில் சமமாக உருட்டவும்.rava poori puri reciperava poori puri reciperava poori puri reciperava poori puri recipe
  • உருட்டப்பட்ட பூரியை ஒரு தட்டில் வைத்து சுத்தமான சமையலறை துண்டு வைத்து மூடி வைக்கவும், அதனால் அவை வறண்டு போகாது.
  • பூரி வறுப்பதிற்கு பான் அல்லது கடாயில் எண்ணெய் சூடாக்கவும். rava poori puri recipe
  • எண்ணெய் போதுமான அளவு சூடானதும், பூரியை ஒவ்வொன்றாக எண்ணையில் சேர்க்கவும்
  • ஒரு நேரத்தில் ஒரு பூரி சேர்க்கவும். இது விரைவில் ஊதி பெரியதாகும்.rava poori puri recipe
  • கீழ் பக்கம் பொன்னிறமானதும், மறுபக்கத்தையும் வறுக்கவும். பூரி முழுவதும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.rava poori puri recipe
  • எல்லா பூரிகளையும் இந்த வழியில் வறுக்கவும். எண்ணெய் மிகவும் சூடாகிவிட்டால், சுடரைக் குறைப்பதன் மூலம் வெப்பநிலையைக் குறைக்கவும்.
    rava poori puri recipe
  • இறுதியாக, உங்களுக்கு விருப்பமான எந்த மசாலாவுடன் சூடான பூரியை பரிமாறவும்.rava poori puri recipe

செய்முறை விளக்க வீடியோ

குறிப்புகள்

  • ரவை நிறைய ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே தண்ணீரைச் சேர்ப்பதில் கவனமாக இருங்கள்.
4.3 4 votes
Rate this Recipe
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
தமிழ்