Mushroom Dum Biryani

காளான் தம் பிரியாணி

பகிர...

காளான் தம் பிரியாணி | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். இது தம் ஸ்டைல் வெஜ் பதிப்பிலுள்ள ஒரு பிரியாணி. இது தம் ஸ்டைல் வெஜ் பதிப்பிலுள்ள ஒரு பிரியாணி. இது சுவையான சாதம், காளான் மசாலா, வறுத்த வெங்காயம், முந்திரி, திராட்சை, அன்னாசிப்பழ துண்டுகள் மற்றும் கொத்தமல்லி இலைகளே அடுக்குகளாக கொண்டுள்ளது.

காளான் தம் பிரியாணி செய்வது எப்படி?

காளான் தம் பிரியாணி | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். சாதம் கிராம்பு, ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களுடன் சமைக்கப்படுகிறது. சாதத்தில் நெய்யின் வாசனை தனித்துவமான நறுமணத்தை அளிக்கிறது. மேலும், இந்த வாசனை தம் அடுக்குகளில் மசாலா, வறுத்த வெங்காயம், முந்திரி மற்றும் திராட்சையிலும் உள்ளன.

தயாரிப்பு பணிகள்:

இந்த காளான் தம் பிரியாணி தயாரிக்க நிறைய தயாரிப்பு பணிகள் தேவை. செயல்முறையை எளிதாக்க, பிரியாணி செய்வதை பின்வரும் படிகளாக பிரிப்போம்:

அரிசி: தம் பிரியாணிக்கு பாஸ்மதி அரிசியைப் பயன்படுத்துவது தான் ருசியாயிருக்கும். எந்த பிரியாணிக்கும், முதல் படி அரிசியை குறைந்தது 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் ஊற வைக்கணும். அரிசி சமைக்க நீங்கள் குக்கர் அல்லது அடி கனமான பாத்திரத்தைப் பயன்படுத்தலாம். பாஸ்மதி அரிசி சமையலுக்கு எப்போதும் 1: 2 விகிதம் தண்ணீருக்கு அரிசி வேவு சரியாயிருக்கும். விரும்பிய நிலைத்தன்மையுடன் அரிசியை சமைப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அரிசியை 80% சமைக்கவும், பின்னர் அரிசி சமைக்கும் மீதமுள்ள செயல்முறை தம் செயல்பாட்டில் செய்யப்படுகிறது.

முந்திரி மற்றும் திராட்சையே வறுக்கவும்: முந்திரி மற்றும் திராட்சை இந்த தம் பிரியாணிக்கு ஒரு சிறந்த சுவையை சேர்க்கின்றன. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், இது பயணப்படுத்துவதை தவிர்க்கலாம்.

வெங்காயம் வறுக்கவும்:தம் பிரியாணியைப் பற்றிய மற்றொரு விஷயம், தம் செயல்பாட்டில் ஒரு அடுக்காக பிரிஸ்டா அல்லது பிரிஸ்தா எனப்படும் முறுமுறுப்பான வறுத்த வெங்காயத்தை சேர்ப்பது. இதின் வாசனை பிரியாணிக்கு ஒரு நல்ல நறுமணத்தை கொடுக்கிறது.

காளான் மசாலா தயாரித்தல்: காளான்கள் வெங்காயம்-தக்காளி கிரேவியில் மசாலாப் பொருட்களுடன் சமைக்கப்படுகின்றன.

அனைத்து தயாரிப்பு வேலைகளும் முடிந்ததும், அடுத்த கட்டமாக அவற்றை அடுக்கு அடுக்காக தயாரித்து, பின்னர் அவற்றை தம்மில் சமைப்பது ஆகும்.

தம் பிரியாணி செய்ய: ஒரு அடி கனமான பாத்திரத்தில், சமைத்த சாதம், காளான் மசாலா, வறுத்த வெங்காயம், முந்திரி மற்றும் அன்னாசிப்பழ துண்டுகள் மற்றும் கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக அடுக்குகளாக அடுக்கத் தொடங்குங்கள். ஒரு காற்று வெளியேறாத மூடியைப் பயன்படுத்தி பாத்திரத்தை இறுக்கமாக மூடுங்கள் அல்லது ஒரு போயில் பேப்பரைப் பயன்படுத்தி பாத்திரத்தை மூடியபின் மூடியைப் பயன்படுத்தி மூடவும். தம் போடுவதிற்கு பாத்திரத்தை ஒரு சூடான தோசை கல் மீது குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் வைக்கவும்.

கூடுதலாக, எனது சிக்கன் 65 பிரியாணி, மட்டன் புலாவ் செய்முறை, போர்க் பிரியாணிமற்றும் மீன் பிரியாணிசெய்முறைகளே முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.

காளான் தம் பிரியாணி

Course: ரொட்டிCuisine: இந்தியன்Difficulty: நடுத்தரம்
சர்விங்ஸ் (சேவை)

3

சர்விங்ஸ்
தயாரிப்பு நேரம்

15

நிமிடங்கள்
சமைக்கும் நேரம்

30

நிமிடங்கள்
மொத்த நேரம்

45

நிமிடங்கள்

காளான் தம் பிரியாணி | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். இது தம் ஸ்டைல் வெஜ் பதிப்பிலுள்ள ஒரு பிரியாணி.

தேவையான பொருட்கள்

  • அரிசியை ஊறவைத்தல்
  • 11/2 கப் பாஸ்மதி அரிசி

  • 4 கப் தண்ணீர்

  • காளான் மசாலா தயாரித்தல்
  • 1 டேபிள் ஸ்பூன் என்னை

  • 1 பெரிய அளவிலான வெங்காயம் மெல்லியதாக வெட்டப்பட்டது

  • 2 முதல் 3 பச்சை மிளகாய்

  • 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது

  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்

  • 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்

  • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்

  • 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் தூள்

  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்

  • 1 சிறிய அளவிலான தக்காளி சிறியதாக நறுக்கியது

  • 250 கிராம் பட்டன் காளான்கள் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டது

  • தேவைக்கேற்ப உப்பு

  • புதிய கொத்தமல்லி இலைகள்

  • உலர்ந்த பழங்கள் மற்றும் வெங்காயத்தை வறுக்க
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் + 1 தேக்கரண்டி நெய்

  • 5 முதல் 10 முந்திரி

  • 10 உலர்ந்த திராட்சை

  • 1 கப் மெல்லியதாக வெட்டப்பட்ட வெங்காயம்

  • 2 முதல் 3 டடேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழம் நறுக்கியது (விரும்பினால்)

  • சாதம் தயாரிக்க
  • 2 கிராம்பு

  • 1 நட்சத்திர சோம்பு

  • 1/2" அங்குல அளவு இலவங்கப்பட்டை குச்சி

  • 2 ஏலக்காய்

  • 1 பிரியாணி இலை

  • 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதைகள்

  • 3 கப் தண்ணீர்

  • தேவைக்கேற்ப உப்பு

  • அரை எலுமிச்சைப்பழ சாறு

  • ஊறவைத்து வடிகட்டிய பாஸ்மதி அரிசி

செய்முறை :

  • அரிசியை ஊறவைத்தல்
  • முதலில், 11/2 கப் பாஸ்மதி அரிசியை 4 கப் தண்ணீரில் 15 முதல் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.Mushroom Dum BiryaniMushroom Dum Biryani
  • ஊறவைத்ததும் தண்ணீரை வடிகட்டி அரிசியே ஒதுக்கி வைக்கவும்.
  • காளான் மசாலா தயாரித்தல்
  • ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடாக்கவும்.Mushroom Dum Biryani
  • 1 பெரிய அளவிலான மெல்லியதாக வெட்டியா வெங்காயம் கசியும் வரை நடுத்தர தீயில் வதக்கவும்Mushroom Dum Biryani
  • இப்போது 2 முதல் 3 பச்சை மிளகாய் மற்றும் 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். வாசனை மறையும் வரை வதக்கவும்.Mushroom Dum BiryaniMushroom Dum Biryani
  • பின்னர் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் தூள் மற்றும் 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள் சேர்க்கவும்.Mushroom Dum Biryani
  • மசாலாவை குறைந்த தீயில் 30 விநாடிகள் வறுக்கவும்.Mushroom Dum Biryani
  • இறுதியாக நறுக்கிய ஒரு சின்ன தக்காளியைச் சேர்த்து நன்று கலந்து விடவும். தக்காளி கசியும் வரை மூடி வைத்து சமைக்கவும்.Mushroom Dum BiryaniMushroom Dum BiryaniMushroom Dum Biryani
  • மேலும் 250 கிராம் நறுக்கிய காளான்களைச் சேர்த்து மசாலாவுடன் நன்றாக இணைக்கவும்.Mushroom Dum Biryani
  • தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.Mushroom Dum BiryaniMushroom Dum Biryani
  • மூடி வைத்து, 7 முதல் 10 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும். இடையில் கிளறி விடவும் .Mushroom Dum Biryani
  • சமைத்ததும், சில புதிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து, நன்கு கலந்து, ஒதுக்கி வைக்கவும். காளான் மசாலா தயார்.Mushroom Dum BiryaniMushroom Dum Biryani
  • உலர்ந்த பழங்கள் மற்றும் வெங்காயத்தை வறுக்க:
  • ஒரு பானில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி நெய் சூடாக்கவும்.Mushroom Dum Biryani
  • கொஞ்சம் முந்திரி மற்றும் திராட்சையும் குறைந்த தீயில் வறுத்து எண்ணெயிலிருந்து வடிகட்டி ஒதுக்கி வைக்கவும்.Mushroom Dum BiryaniMushroom Dum Biryani
  • அதே எண்ணெயில் 1 கப் மெல்லியதாக வெட்டப்பட்ட வெங்காயம் சேர்க்கவும். முறுமுறுப்பாக மாறும் வரை குறைந்த தீயில் வறுக்கவும். எண்ணெயிலிருந்து வடிகட்டி அவற்றையும் ஒதுக்கி வைக்கவும்.Mushroom Dum BiryaniMushroom Dum Biryani
  • சாதம் தயாரிக்க
  • அடி கனமான ஒரு பாத்திரத்தை சூடாக்கவும். முந்திரி வறுக்க பயன்படுத்திய அதே எண்ணெயைப் பயன்படுத்தி 2 கிராம்பு, 1 ஸ்டார் அன்னிஸ், 1/2 ″ இன்ச் அளவிலான இலவங்கப்பட்டை குச்சி, 2 ஏலக்காய், 1 பே இலை மற்றும் 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதைகளை குறைந்த தீயில் வதக்கவும்.Mushroom Dum BiryaniMushroom Dum BiryaniMushroom Dum Biryani
  • இப்போது 3 கப் தண்ணீர், தேவைக்கேற்ப உப்பு மற்றும் அரை எலுமிச்சைப்பழ சாறு சேர்க்கவும். தீயே அதிகமாக வைத்திருங்கள்.Mushroom Dum BiryaniMushroom Dum BiryaniMushroom Dum Biryani
  • நன்றாக கலந்து, கொதிக்க ஆரம்பித்ததும் ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்.Mushroom Dum Biryani
  • நன்றாக கலக்கு. அரிசியை ஒரு நடுத்தர தீயில் 15 நிமிடங்கள் மூடி வைத்து சமைக்கவும் அல்லது அரிசி 80 முதல் 90% வரை சமைக்கப்படும் வரை சமைக்கவும்.Mushroom Dum BiryaniMushroom Dum Biryani
  • தீயே அணைத்து அதை ஒதுக்கி வைக்கவும்.
  • தம் பிரியாணி தயாரிக்க
  • குறைந்த தீயில் ஒரு தோசை கல்லை சூடாக்கவும்.
  • கனமான பாத்திரத்தில் சிறிது நெய் தடவவும்.
  • இப்போது சமைத்த சாதம், காளான் மசாலா மற்றும் வறுத்த முந்திரி, திராட்சைய, வெங்காயம் ஒவ்வொன்றாக அடுக்க தொடங்குங்கள்.Mushroom Dum BiryaniMushroom Dum BiryaniMushroom Dum Biryani
  • போயில் பேப்பர் அல்லது காற்று இறுக்கமான மூடியால் பாத்திரத்தை மூடி வைக்கவும். சூடான கல்லில் பாத்திரத்தை வைத்து, குறைந்த தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தம் போடவும். Mushroom Dum Biryani
  • தீயே அணைத்து, சூடான பிரியாணியை பரிமாறவும்.Mushroom Dum Biryani

செய்முறை விளக்க வீடியோ

5 1 vote
Rate this Recipe
Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
Su k
Su k
3 years ago

I made it today and it was awesome ? thanks for the clear and neat recipe

2
0
Would love your thoughts, please comment.x
()
x
தமிழ்