chickpea or channa sundal recipe

கொண்டைக்கடலை சுண்டல் செய்முறை

பகிர...

கொண்டைக்கடலை சுண்டல் செய்முறை | சிறந்த மாலை சிற்றுண்டி | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். தென்னிதியாவின் மிக சிறந்த ஒரு சிற்றுண்டி ஆனது இந்த சுண்டல் செய்முறை. சுண்டல் என்றால் அனைவருக்கும் ரொம்ப புடிக்கும். அடிப்படையில் இது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி.

சுண்டலும் தேநீரும் ஒரு சிறந்து மாலை சிற்றுண்டி ஆகும். தென்னிந்தியாவின் கோவில்களில் பெரும்பாலும் பிரசாதமாக வழங்கப்படும் ஒரு உணவு. மேலும், நவராத்திரி பருவத்தில் பொம்மைகளின் பண்டிகையை (கோலு) கொண்டாடும் ஒவ்வொரு வீட்டிலும் இது வழங்கப்படுகிறது. பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, துருவிய தேங்காய் ஆகியவை சேர்க்கும் போது இதின் உன்னதமான சுவை வெளிப்படுத்துகின்றன.

பச்சை பட்டாணி, வேர்க்கடலை, பாசி பருப்பு, கருப்பு கொண்டக்கடலை, சோளம் போன்ற பல பருப்பு வகைகள் மற்றும் பயறு வகைகளை கொண்டு நீங்கள் சுண்டல் செய்யலாம்.

கொண்டைக்கடலை சுண்டல் செய்முறை செய்வது எப்படி?

கொண்டைக்கடலை சுண்டல் செய்முறை | சிறந்த மாலை சிற்றுண்டி | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். இவை ஆரோக்கியமான காலை உணவாகவோ அல்லது சிற்றுண்டியாகவோ தயாரிக்க மிகவும் எளிதானது. அவை விரைவாக தயாரிக்கப்படுவதால், ஒரு பக்க உணவாகவும் வழங்கப்படலாம். கொண்டைக்கடலை இரவு முழுவதும் ஊறவைத்து, பின்னர் குக்கெரில் சமைக்கப்படுகிறது. பின்னர் தாளிக்கப்படுகிறது. இது ஒரு வெங்காயம் பூண்டு இல்லாத செய்முறை.

பெருங்காயம், மிளகாய் செதில்கள், கடுகு, உளுந்து பருப்பு, கறிவேப்பிலை மற்றும் துருவிய தேங்காயின் புத்துணர்ச்சி நறுமணம் மற்றும் சுவை மென்மையாக சமைத்த கொண்டைக்கடலையில் சேரும் போது நன்றாக இருக்கும். மேலும் கொண்டக்கடலை பயன்படுத்தி செய்யும் ஃபலாஃபெல் மற்றும் றோட்டுக்கடை காளான் மசாலா ஆகிய செய்முறைகளே சிற்றுண்டி பிரிவில் இருந்து முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்.

கொண்டைக்கடலை சுண்டல் செய்முறை

Course: தின்பண்டங்கள்Cuisine: இந்தியன்Difficulty: சுலபம்
சர்விங்ஸ் (சேவை)

2

சர்விங்ஸ்
தயாரிப்பு நேரம்

5

நிமிடங்கள்
சமைக்கும் நேரம்

15

நிமிடங்கள்
Soaking Time

6

மணி
மொத்த நேரம்

20

நிமிடங்கள்

கொண்டைக்கடலை சுண்டல் செய்முறை | சிறந்த மாலை சிற்றுண்டி | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். தென்னிதியாவின் மிக சிறந்த ஒரு சிற்றுண்டி ஆனது இந்த சுண்டல் செய்முறை. சுண்டல் என்றால் அனைவருக்கும் ரொம்ப புடிக்கும்.

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் கொண்டைக்கடலை

  • 1 தேக்கரண்டி உப்பு

  • 2 கப் தண்ணீர்

  • 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்

  • 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு

  • 1/2 தேக்கரண்டி கடுகு

  • 1/2 தேக்கரண்டி சிறியதாக நறுக்கிய இஞ்சி

  • 1/2 தேக்கரண்டி சிறியதாக நறுக்கிய பச்சை மிளகாய்

  • 1 காஷ்மீரி சிவப்பு மிளகாய்

  • கருவேப்பிலை

  • ஒரு சிட்டிகை பெருங்காயம்

  • 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்

  • 1/4 தேக்கரண்டி சில்லி பிளேக்ஸ் (விரும்பினால்)

  • நறுக்கிய கொத்தமல்லி இலைகள் (விரும்பினால்)

செய்முறை :

  • 1 கப் கொண்டைக்கடலை ஒரு இரவு முழுவதும் அல்லது 6 முதல் 8 மணி நேரம் போதுமான தண்ணீரில் ஊற வைக்கவும்.Chickpea or Channa SundalChickpea or Channa SundalChickpea or Channa Sundal
  • ஊறுனதும் வடிகட்டவும். பின் 1 தேக்கரண்டி உப்பு மற்றும் 2 கப் தண்ணீருடன் ஊறவைத்த சுண்டலை குக்கெரில் சமைக்கவும். 5 முதல் 6 விசில் வரும் வரை நடுத்தர தீயில் அல்லது சுண்டல் மென்மையாக சமைக்கும் வரை சமைக்கவும்.Chickpea or Channa SundalChickpea or Channa Sundal
  • சமைத்தவுடன், கூடுதல் தண்ணீர் இருக்கிறதா என்று சோதிக்கவும். தண்ணீர் இருந்தால் வடிகட்டி ஒதுக்கி வைக்கவும்.Chickpea or Channa Sundal
  • தாளிக்க :
  • ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கவும். 1 தேக்கரண்டி உள்ளுதன்பறுப்புச் சேர்த்து 2 முதல் 3 வினாடிகள் குறைந்த தீயில் வறுக்கவும்.Chickpea or Channa SundalChickpea or Channa Sundal
  • பின்னர் 1/2 தேக்கரண்டி கடுகு சேர்த்து வெடிக்கும் வரை வறுக்கவும்.Chickpea or Channa Sundal
  • உடனடியாக, 1/2 தேக்கரண்டி சிறியதாக நறுக்கிய இஞ்சி, 1/2 தேக்கரண்டி சிறியதாக பச்சை மிளகாய், 1 காஷ்மீரி சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 10-15 விநாடிகள் வதக்கவும்.Chickpea or Channa SundalChickpea or Channa Sundal
  • இப்போது ஒரு சிட்டிகை பெருங்காயம் மற்றும் சமைத்த கொண்டைக்கடலை சேர்க்கவும். குறைந்த தீயில் 4-5 நிமிடங்கள் நன்றாக கிளறி வதக்கவும்.Chickpea or Channa SundalChickpea or Channa Sundal
  • 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும். ஒரு காரமான சுவைக்காக நான் 1/2 தேக்கரண்டி மிளகாய் செதில்கள் (சில்லி பிளேக்ஸ்) சேர்க்கிறேன். நன்றாக கலந்து தீயே அணைக்கவும்.Chickpea or Channa SundalChickpea or Channa SundalChickpea or Channa Sundal
  • சில கொத்தமல்லி இலைகள் தூவி சுண்டலை பரிமாறவும்.Chickpea or Channa Sundal

செய்முறை விளக்க வீடியோ

குறிப்புகள்

  • மிளகாய் செதில்களைச் சேர்ப்பது முற்றிலும் விருப்பமானது. இது சண்டல் செய்முறைக்கு ஒரு சிறப்பு காரத்தை கொடுக்கிறது.
0 0 votes
Rate this Recipe
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
தமிழ்